ஞாயிறு, 12 ஏப்ரல் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2026 (19:15 IST)

அப்போ விஜய் உதவல.. இப்ப தளபதி சிஎம் ஆகணும்!. பொன்னம்பலத்துக்கு என்ன கஷ்டம்?...

ponnambalam2
தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் சண்டை காட்சி நடிகராகவும், வில்லனாகவும் நடித்தவர் பொன்னம்பலம். குறிப்பாக விஜயகாந்த் நடித்த பல படங்களில் அவருடன் ஒன் டு ஒன் சண்டை போடும் நடிகராக நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இவரின் சிகிச்சைக்கு சிரஞ்சீவி உள்ளிட்ட பல நடிகர்களும் உதவி செய்தார்கள். தற்போது உடல் நலமடைந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு வீல் சேரில் அமர்ந்தபடியே நடனமாடிய பொன்னம்பலம் தற்போது  விஜயின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.

நேற்று கூட கம்பம் தேனி பகுதியில் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்த பொன்னம்பலம் ‘தளபதி எல்லாவற்றையும் விட்டு விட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார்.. மக்களுக்கு சேவை செய்வதுதன் அவரின் ஒரே நோக்கம். எனவே தீய சக்தி திமுகவை ஆதரிக்காமல் நாம் தளபதியை முதலமைச்சர் ஆக்க வேண்டும்’ என்றெல்லாம் பேசி வருகிறார்.

பொன்னம்பலம் சில வருடங்கள் அதிமுகவில் இருந்தார்.. சில வருடங்கள் பாஜகவில் இருந்தார்.. ஆனால் அவரின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தபோது இந்த இரண்டு கட்சிகளுமே அவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை. திரையுலகை சேர்ந்த ரஜினி, கமல், சிரஞ்சீவி, சரத்குமார், தனுஷ், சிம்பு, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட சிலர்தான் பண உதவி செய்து அவர் உயிர் பிழைக்க காரணமாக இருந்தனர்..

அப்போது ஊடகங்களில் பேசிய பொன்னம்பலம் ‘விஜய் எனக்கு நண்பர்தான்.. பல படங்களில் அவருடன் நடித்திருக்கிறேன். ஆனாலும் அவர் எனக்கு உதவவில்லை’ என்று பேட்டியெல்லாம் கொடுத்தார். தற்போது தவெகவுக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்கிறார்.. பொன்னம்பலத்திற்கு என்ன கஷ்டம் என்று தெரியவில்லை’ என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்..