1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. State Anthem Pushed to Third Place: Vande Mataram Takes Precedence at DK Shivakumar's Swearing-in Ceremony!

கர்நாடக மாநிலத்திலும் வந்தே மாதரம் முதலிடம்.. மாநில வாழ்த்துக்கு 3வது இடம்...!

டி.கே.சிவகுமார்
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள டி.கே.சிவகுமார் அவர்களின் பதவியேற்பு விழா, பெங்களூரு ஆளுநர் மாளிகையில் இன்று விமரிசையாக நடைபெற்றது. இவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் முறைப்படி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த  மாற்றம் நிகழ்ந்துள்ளது.
 
இந்த விழாவில், வழக்கமான அரசு நெறிமுறைகள் மாற்றியமைக்கப்பட்டு, வந்தே மாதரம் பாடல் முதலாவதாக இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும், இறுதியாகக் கர்நாடக மாநிலத்தின் அதிகாரப்பூர்வ வாழ்த்துப் பாடலான “ஜய பாரத ஜனனிய தனுஜாதே..” பாடலும் ஒலிக்கப்பட்டன. 
 
பொதுவாக மாநில அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும் மரபு நடைமுறையில் உள்ள நிலையில், இந்த மாற்றம் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
 
சமீபத்தில் தமிழ்நாட்டில் ஜோசப் விஜய் மற்றும் புதுச்சேரியில் ரங்கசாமி ஆகியோர் முதலமைச்சர்களாகப் பொறுப்பேற்ற விழாக்களிலும் இதே போன்று வந்தே மாதரத்திற்கு முதலிடம் வழங்கப்பட்டு, மாநில வாழ்த்துப் பாடல்கள் இறுதிக்குத் தள்ளப்பட்டன. இதற்குத் தமிழகத்தில் ஏற்கனவே பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தற்போது கர்நாடகாவிலும் மாநில வாழ்த்துப் பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றுவிட்டதா? புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கையால் பரபரப்பு..!