1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Vijay Hands Over Vacant Rajya Sabha Seat to Ally Congress in Tamil Nadu!

இன்னொரு ராஜ்யசபா தொகுதி.. ஓசியில் பெற்ற காங்கிரஸ்.. 6 மாதங்களுக்கு முன் திமுகவிடம்.. இப்போது தவெகவிடம்..

rahul vijay
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது நாடாளுமன்ற மேலவை எம்பி பதவியைத் துறந்தார். இதனால் ஏற்பட்ட காலி இடத்திற்கான தேர்தல் வரும் 18-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. தற்போதைய பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்த தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நிறுத்தப்படும் நபர் மிக எளிதாக வெற்றிபெறும் சூழல் நிலவியது.
 
ஆயினும், மாநிலத்தில் தவெக ஆட்சி மலர தோள் கொடுத்த கூட்டணி கட்சியான காங்கிரஸ், இந்த நாடாளுமன்ற மேலவை இடத்தை தங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விரும்பியது. இது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆலோசித்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முதலமைச்சர் விஜயை சந்தித்து, அந்த இடத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக்கொண்டார். 
 
தோழமை கட்சியின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, காலியாக உள்ள ராஜ்யசபா சீட்டை காங்கிரசுக்கே வழங்குவதாக முதல்வர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த இடத்திற்கான தங்களது வேட்பாளர் யார் என்பதை காங்கிரஸ் மேலிடம் இன்னும் சில தினங்களில் அறிவிக்கும் என தெரிகிறது. 
 
ஏறத்தாழ மூன்று மாதங்களுக்கு முன்புதான், திமுக கூட்டணியின் வாயிலாக காங்கிரசுக்கு ஒரு ராஜ்யசபா இடம் வழங்கப்பட்டு, கிறிஸ்டோபர் திலக் எம்பியாக நாடாளுமன்றம் சென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி செல்லாது: காலம் கடந்து வந்த தீர்ப்பால் என்ன பலன்?