1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Anna University Deploys Advanced Tech to Flush Out Fake Professors in Engineering Colleges!

பொறியியல் கல்லூரிகளில் 1000 போலி பேராசிரியர்கள்.. 5 வருடங்களாக தூங்கி கொண்டிருந்த திமுக அரசு..

அண்ணா பல்கலைக்கழகம்
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் அரங்கேறி வரும் போலி பேராசிரியர்கள் முறைகேட்டை வேரோடு ஒழிக்க, அண்ணா பல்கலைக்கழகம் தற்போது ஒரு அதிரடியான புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. 
 
வரும் 2026 - 2027ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அங்கீகாரத்தை பெற, மாநிலம் முழுவதும் இருந்து சுமார் 463 பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன. இந்த சூழ்நிலையில், தங்களின் கல்லூரிகளில் பேராசிரியர்கள் எண்ணிக்கையை தவறாக காட்டும் முறைகேடுகளை கண்டுபிடிப்பதற்காக புவிக்குறியீடு செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் மற்றும் அதிநவீன 'ஃபேஸ் ரெகக்னிஷன்' எனப்படும் முக அடையாளம் காணும் தொழில்நுட்ப அமைப்பை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது.
 
கடந்த காலங்களில் பல்வேறு கல்லூரிகள் ஒரே பேராசிரியரை தங்களது நிறுவனத்திலும் பணியாற்றுவதாக கணக்குக் காட்டி ஏமாற்றி வந்தன. ஆரம்பத்தில் 300 பேராசிரியர்கள் மட்டுமே இவ்வாறு முறைகேடாக பல இடங்களில் ஒரே நேரத்தில் பணியாற்றுவதாக கருதப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் ஆழமான ஆய்வில் அந்த எண்ணிக்கை 1000க்கும் மேல் என்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, தற்போது பொறியியல் பேராசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் விவரங்கள் அடங்கிய 10 இலக்க தனித்துவமான ஆசிரியர் அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் பேராசிரியர்கள் எங்கு பணியாற்றுகிறார்கள் என்பதை துல்லியமாக உறுதி செய்ய முடியும். இந்த ஒட்டுமொத்த கல்லூரி ஆய்வு பணிகளும் வரும் ஜூன் 10ஆம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, ஜூன் 29ஆம் தேதி கல்லூரிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதற்கு முன்னதாகவே தகுதியான கல்லூரிகளுக்கான அனுமதிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Webdunia
அடுத்த கட்டுரையில்
கர்நாடக மாநிலத்திலும் வந்தே மாதரம் முதலிடம்.. மாநில வாழ்த்துக்கு 3வது இடம்...!