1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. fans present ajith photo to tvk leader vijay

விஜய் கையில் அஜித் போட்டோ!.. பிரச்சாரம் வேறலெவல்!. வைரல் வீடியோ...

vijay ajith
நடிகர் விஜய் துவங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு காரணம் விஜய் ஒரு பிரபலமான நடிகராக இருப்பதால் அவருக்கு ஆதரவாக ஒரு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதோடு நிறைய பெண்களும், பொதுமக்களும் கூட தவெகவுக்கு வாக்களிப்பதாக சொல்கிறார்கள்.. நிறைய கருத்துக்கணிப்பில் விஜய் 20 சதவீத வாக்குகளை வாங்குவார், 7 முதல் 8 இடங்களில் தவெக வெற்றி பெறும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது..

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெறவிருப்பதால் கடந்த சில நாட்களாகவே தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் பல ஊர்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்து வருகிறார். சமீபத்தில் அப்படி அவர் தூத்துக்குடி சென்ற போது ஏராளமான மக்கள் கூடி விட்டனர் இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் ஏற்கனவே இணையத்தில் வெளியானது..

இன்று காலை பிரச்சாரம் செய்வதற்காக விஜய் சிவகங்கை மாவட்டத்திற்கு சென்றார். அங்கு காரைக்குடி உள்ளிட்ட இடங்களில் அவர் பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்நிலையில், சிவகங்கையில் அவர் தனது பிரச்சார வேனில் வந்துகொண்டிருந்தபோது விஜயும் அஜித்தும் இணைந்திருப்பது போல ஒரு போட்டோவை ஒரு ரசிகர் அவருகு பரிசளித்தார். அதேபோல் விஜய் கிரிக்கெட் வீரர் தோனியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒருவர் பரிசளிளித்தார்.

அந்த இரண்டு போட்டோக்களையும் வாங்கிக் கொண்டு சில நிமிடங்கள் கையில் வைத்திருந்தார் விஜய். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது..

Vidoe Courtesty to Polimer News


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Polimer News (@polimernews)


 


About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஜனநாயகன் படத்தில சீனாவே வச்சிட்டாங்களே!.. பிரெஸ்ஸ பார்த்து பயந்து ஓடும் விஜய்!..