ஆன்லைன் சூதாட்டம்!. லோன் ஆப்பில் கடன்!. மகனை அடித்துக்கொன்ற தந்தை...
ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கி மொபைலில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்த மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் நடந்திருக்கிறது. ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் வசித்து வந்தவர் வம்சி கிருஷ்ணா. இவருக்கு வயது 22. பெங்களூரில் பிசிஏ படித்துவிட்டு ஊர் திரும்பிய வம்சி நாள் முழுவதும் செல்போனில் ஆன்லைன் ரம்பி விளையாடி வந்திருக்கிறார்.
விளையாடுவதற்கு பணம் வேண்டும் என்பதால் ஆன்லைன் ஆப் மூலம் கடன் வாங்கியிருக்கிறார். சமீபத்தில்தான் அவரின் பெற்றோர் அவர் ஆப் மூலம் வாங்கிய 40 ஆயிரம் கடனை அடைத்திருக்கிறார்கள். ஆனால், மீண்டும் ஆப் மூலம் பணம் கடன் வாங்கி விளையாடியிருக்கிறார் வம்சி.
இதையடுத்து வம்சி ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என கூறி லோன் ஆப் ஏஜெண்டுகள் வீட்டிற்கு வந்து மிரட்டியிருக்கிறார்கள். இதனால், கடந்த சில நாட்களாகவே வீட்டில் சண்டை ஏற்பட்டிருக்கிறது. கடந்த புதன்கிழமை ஆத்திரமடைந்த வம்சி கிருஷ்ணாவின் தந்தை ராவ் மரக்கட்டையால் மகனின் தலையில் அடித்ததில் சம்பவ இடத்திலேயே வம்சி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.