மகன் மிதுனுக்கு அதிமுகவில் பதவியா?!.. பழனிச்சாமி கொடுத்த விளக்கம்!..
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கூவத்தூர் விடுதியில் சசிகலாவின் ஆசியால் தமிழகத்தின் முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா சிறைக்கு சென்ற பின் டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு கட்சி மற்றும் ஆட்சி இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் பழனிச்சாமி. அதேபோல் தன்னை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். குறிப்பாக ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்கினார்..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று அதிமுக மூன்றாம் இடத்திற்கு சென்றுவிட்டது. இதனால் அந்த கட்சி எம்.எல்.ஏக்களே பழனிச்சாமி தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால்தான் அவர்களில் 24 பேர் தவெகவுக்கு ஆதரித்தார்கள்.
இதுவரை 5 எம்.ஏல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அதில், நான்கு எம்.எல்.ஏக்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவிலும் இணைந்து விட்டார்கள்.
ஒருபக்கம் எடப்பாடி பழனிச்சாமியின் மகன் மிதுனுக்கு அதிமுகவின் ஐடி விங் அல்லது இளைஞர் அணியில் முக்கிய பதவி கொடுக்கப்படலாம் என சமீபத்தில்செய்திகள் வெளியானது..
இந்நிலையில், இன்று காலை செய்தியாளிடம் பேசிய போது பழனிச்சாமி அதை மறுத்தார். என் மகன் மிதுன் பற்றி தொலைக்காட்சிகளில் பல்வேறு விவாதங்கள் வருகிறது. அது தவறு. அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக மட்டும்தான் இருக்கிறார். கட்சியில் எந்த நிர்வாக பொறுப்பிலும் அவர் இல்லை. அழுத்தம் திருத்தமாக சொல்கிறேன். என் மகன் மிதுன் அரசியலுக்கு வர மாட்டார் என கூறியிருக்கிறார்.