1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. edappadi palanisamy says dmk is admk enemy

கடைசி 3 நாள்!. எல்லாம் மாறிப்போச்சி!.. எடப்பாடி பழனிச்சாமி சொன்னது என்ன?

eps vijay
தமிழக அரசியலை பொறுத்தவரை பல வருடங்களாகவே அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையேதான் போட்டி நிலலி வந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் புதிதாக கட்சி தொடங்கி இரண்டு வருடத்தில் தேர்தலில் போட்டியிட்ட தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து விட்டது.

அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழ்நாட்டில் முதலமைச்சராக மாறியுள்ளார். தவெகவின் இந்த வெற்றியை அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து தவெக மீது இரண்டு கட்சிகளுமே கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

ஒருபக்கம் விஜய் முதல்வராவதற்கு முன் திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியமைக்க முயன்றதாக அக்கட்சியை சேர்ந்த சிவி சண்முகம் உள்ளிட்ட 24 எம்எல்ஏக்கள் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர். இதுவும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 எம்.எல்.ஏக்களை மட்டுமே பெற்று மூன்றாவது இடத்திற்கு சென்று விட்டது. அதன் வாக்கு வங்கியும் கணிசமாக குறைந்துவிட்டது.  அதோடு, அதிமுக எம்.எல்.ஏக்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துவிட்டனர்.

தொடர் தோல்வியால் எடப்பாடி தலைமையின் தலைமை மீது அதிமுகவினர் பலருக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நேற்று அதிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ‘தவெக நம்முடைய எதிரி இல்லை. திமுகதான் நமது உண்மையான அரசியல் எதிரி.. தவெகவின் வெற்றி நிலைக்காது.. அடுத்து எப்போது தேர்தல் வந்தாலும் நாம்தான் வெற்றி பெறுவோம்.. வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசி மூன்று நாட்களில் தான் அதிமுக தனது வெற்றியை பறிகொடுத்து விட்டது’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகுமா?.. டிரம்ப் சொல்வது நடக்குமா?...