தொடர்புடைய செய்திகள்
- மற்ற கட்சியினர் தவெகவில் இணைவது பலமா?. தலைவலியா?.. தவெகவுக்கு உள்ள சவால்...
- தவெகவுக்கு தாவும் அதிமுகவினர்!.. அப்செட்டில் தவெகவினர்!.. நடப்பது என்ன?!...
- இனிமேல் அரசியலே வேண்டாம்.. அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி...!
- அதிமுகவோட வெற்றி பாமக போட்ட பிச்சை!.. சிவி சண்முகம் கோபம்!...
- கடைசி 3 நாள்!. எல்லாம் மாறிப்போச்சி!.. எடப்பாடி பழனிச்சாமி சொன்னது என்ன?
எல்லாரையும் கட்சியை விட்டு நீக்குறது ஹிஸ்ட்ரியா?!.. பழனிச்சாமிக்கு சி.விஜயபாஸ்கர் எதிர்ப்பு!..
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு சென்றுவிட்டது. அதிமுகவின் தொடர் தோல்வி காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமை என்பது அதிருப்தி கொண்ட சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் தவெகவ்வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
அந்த கூட்டணியில் சி.விஜயபாஸ்கரும் இருந்தார். இவர் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக செயல்பட்டவர்.மேலும் சிவி சண்முகம் உருவாக்கிய அந்த அணியில் அதிமுகவின் சட்டசபை கொறடாகவும் அறிவிக்கப்பட்டார். ஆனால் அந்த அணி ரொம்ப நாள் நடிக்கவில்லை. அவற்றில் 21 பேர் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே சென்று விட்டனர். மீதி 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு வந்து விட்டனர்..
அதிமுக எம்.எல்.ஏக்களில் சி.விஜயபாஸ்கர் மற்றும் சிவி சண்முகம் ஆகிய இருவர் மட்டுமே தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பேசி வருகிறார்கள். சமீபத்தில் சிவி சண்முகம் பழனிச்சாமி மீது பல அடுக்கடுக்கான புகார்களை சொன்னார். அவருக்கு அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதிலடி கொடுத்திருந்தார். தற்போது விஜய பாஸ்கர் பேச துவங்கியிருக்கிறார்
இந்நிலையில், சி.விஜய பாஸ்கர் தனது எக்ஸ் தளத்தில் உழைக்கும் உண்மைத் தொண்டர்களை எதிரிகளாகப் பார்க்கும் தலைமையும், கேள்வி கேட்பதையே குற்றமாகப் பார்க்கும் அரசியலும் வெற்றிக்கான பாதை அல்ல. வரலாறு நினைவில் வைத்திருப்பது எத்தனை பேரை நீக்கினோம் என்பதை அல்ல. எத்தனை பேரை ஒன்றிணைத்தோம்.. எத்தனைக் களங்களை வென்றெடுத்தோம் என்பதைத்தான் என பதிவிட்டிருக்கிறார்.