1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cv shanmugam said admk woult not have won if not pmk

அதிமுகவோட வெற்றி பாமக போட்ட பிச்சை!.. சிவி சண்முகம் கோபம்!...

cv shanmugam
கடந்த சில தேர்தல்களாகவே அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதுவும் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 47 எம்.எல்.ஏக்களை மட்டுமே பெற்று எதிர்க்கட்சியாக கூட அதிமுக அமரவில்லை. தொடர் தோல்வியின் காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் மீது சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி உள்ளிட்ட 25 எம்.எல்.ஏக்கள் அதிருப்தியடைந்து தவெகவுக்கு ஆதரவு என அறிவித்தனர். மேலும் அவர்களில் 24 பேர் தவெகவுக்கு ஆதரவாக சட்டசபையில் வாக்களித்தனர். அதைவிட ஹைலைட்டாக அதிமுக எம்.எல்.ஏக்கள் நான்கு பேர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அதிமுகவிலும் இணைந்து விட்டனர்..

தற்போது எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மீதி எம்.எல்.ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் போய்விட சிவி சண்முகம் மட்டும் இன்னும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்கவில்லை
. இந்நிலையில்தான், திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிவி சண்முகம் ‘பழனிச்சாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக படுதோல்வியை மட்டுமே சந்தித்து வருகிறது. அதிமுக தற்போது சீட்டு கட்டு போல சரிவை சந்தித்துள்ளது. வட மாவட்டங்களில் அதிமுக வென்ற தொகுதிகள் பாமக போட்ட பிச்சை. பாமக கூட்டணியில் இல்லையென்றால் 7 அல்லது 8 தொகுதியில் மட்டும்தான் அதிமுக வென்றிருக்கும்..

பொதுக்குழுவை கூட்டுங்கள்.. அதற்கு தாமதம் ஏற்பட்டால் செயற்குழுவை கூட்டுங்கள்.. ஏன் பயப்படுகிறீர்கள்? ஏன் தயங்குகிறீர்கள்?.. ஒரு இயக்கத்தில் மாற்று கருத்து இருக்கத்தான் செய்யும். கேள்வி எழுப்பியதற்காக தொடங்கப்பட்ட அதிமுகவில் தற்போது யாரும் கேள்வி கேட்க கூடாத நிலை உருவாகியுள்ளது. தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கான காரணத்தை தொண்டர்கள் வரை உணர்ந்துள்ளனர்.. பழனிச்சாமி உணரவில்லை’ என கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
இலங்கையில் கூட பிரியாணி கடை வச்சிருக்கேன்!.. பாரதிராஜாதான் காரணம்!.. RR பிரியாணி ஓனர் பேட்டி...