வேலை செய்யலனா சம்பளம் இல்ல!.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு எச்சரிக்கை..
தமிழகத்தில் தற்போது ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. தவெக ஆட்சிக்கு வந்தது முதலே டாஸ்மாக் தொடர்பான முறைகேடுகள், பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருட்களை தடுப்பது போன்ற விஷயத்தில் இந்த அரசு கவனம் செலுத்த துவங்கியது.
டாஸ்மாக்கில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவது என்பது பல வருடங்களாக தொடர்ந்து வரும் நிலையில், தவெக அரசு இதற்கு முடிவு கட்ட முடிவெடுத்துள்ளது. ஆனால் சில நடைமுறை சிக்கல் காரணமாக அது இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. ஆனாலும் சமீபத்தில் இனிமேல் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் கட்டணம் வாங்க மாட்டோம் என டாஸ்மாக் ஊழியர் சங்கமே அறிவித்தது..
இந்நிலையில்தன், டாஸ்மாக் பணியாளர்களுக்கு டாஸ்மார்க் நிர்வாகம் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. மதுக்கடை ஊழியர்கள் வேலைக்கு வந்தால் மட்டுமே ஊதியம் வழங்கப்படும்.. தவிர்க்க முடியாத சூழ்நிலையை தவிர் பணி நேரத்தில் கடையை விட்டு வெளியேறக் கூடாது..
அனுமதி இல்லாமல் பணிக்கு வராமல் இருப்பது அங்கீகரிக்கப்படாத விடுப்பாக கருதப்படும்.. மது விற்பனை கடைகளில் ஊழியர்கள் எந்த போராட்டத்திலும், தர்ணாவிலும் ஈடுபடக் கூடாது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வேலை இல்லையேல் ஊதியம் இல்லை என்பதை கடுமையாக செயல்படுத்த மேலாளர்களுக்கு டாஸ்மார்க் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.