1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. o paneer selvam may join in tvk soon

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யும் ஓபிஎஸ்?.. தவெகவில் இணைகிறாரா?..

vijay ops
அதிமுக ஆட்சி காலத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் கட்சியில் இவர் ஓரம் கட்டப்பட்டார். இடையில் எடப்பாடி பழனிச்சாமி இவரை சேர்த்துக் கொண்டாலும் பன்னீர் செல்வத்துக்கு கட்சியில் பெரிய மரியாதை கிடைக்கப்பெறவில்லை.

ஏனெனில் ஆட்சி, கட்சி இரண்டையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. ஒரு கட்டத்தில் ஓ பன்னீர்செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் எடப்பாடி பழனிச்சாமி நீக்கினார். அந்த நிலையில்தான் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்ற நிலையில் தேர்தலில் திமுக தோல்வியடைந்தது. அதோடு இதுவரை திமுகவில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி கொடுக்கப்படவில்லை. எனவே, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு விரைவில் அவர் தவெகவில் சேரவும் திட்டமிட்டிருப்பதாக தற்போது செய்திகள் கசிந்திருக்கிறது.

ஓபிஎஸ் இருந்தால் தென் மாவட்டத்தில் தவெக வலுப்பெறும் என்பதால் முதல்வர் விஜயும் இதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம் விசில் சின்னத்தில் நிற்பார் என்கிறார்கள். மேலும், 2029 பாராளுமன்ற தேர்தலில் பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தாகூர் தவெக சார்பில் களமிறக்கப்படுவார் என்கிறார்கள்.


About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
விஜய்க்கு தனுஷ் சமமாக முடியாது!.. உதயநிதிக்கு தெரியவில்லை!.. பிஸ்மி பேட்டி...