உதயநிதியின் கேள்விக்கு விஜய் பதில் சொல்லமாட்டார்!. தீர்மானம் கொண்டுவரும் தவெக?..
தமிழகத்தில் தற்போது ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மே 10ம் தேதி ஜோசப் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஒருபக்கம் வழக்கம் போல் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தவெக ஆட்சியை கடுமையாக குறை சொல்லி வருகிறார்கள்.
ஆனால் முதல்வர் விஜயோ பெரிதாக எதற்கும் அலட்டிக்கொள்வதில்லை. தவெக அரசின் மீதும் விஜயின் மீதும் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு அமைச்சர்கள் ராஜ்மோகன், சிடி நிர்மல் குமார் ஆகியோர் மட்டுமே ஊடகங்களில் பதில் சொல்கிறார்கள். சமீபத்தில் காவிரி நீர் தொடர்பாக திமுக குற்றச்சாட்டுகளுக்கும், புகார்களுக்கும், விமர்சனங்களுக்கும் முதலமைச்சர் விஜய் எந்த பதிலும் சொல்லவில்லை.
இதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். முதல்வர் விஜய் எப்போதும் வாய்திறந்து பேசுவதில்லை என தொடர்ந்து அவர் கூறி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விஜயை ஒரு நடிகையோடு இணைத்து ஆபாசமாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று காலை கைது செய்யப்பட்டார். அதேநேரம் நேற்று இரவு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில்தான், பனையூரில் நேற்று நடந்த தவெக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் கேள்விகளுக்கு இனி முதலமைச்சர் பதில் சொல்லக்கூடாது.. அமைச்சர்களே பதில் அளிக்கிறோம்.. அவை முன்னவரான நீங்கள் தீர்மானம் கொண்டு வாருங்கள் என செங்கோட்டையனிடம் அவர் கோரிக்கை வைத்திருக்கிறார். விரைவில் இது தீர்மானம் ஆக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஆனால் அப்படி செய்தால் இதுவரை அரசியல் வரலாற்றிலேயே முதலமைச்சர் பதில் சொல்ல மாட்டார் என்கிற தீர்மானத்தை தவெகதான் நிறைவேற்றியிருக்கிறது என திமுக விமர்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.