1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cauvery water coming to tamilnadu mettur dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!.. அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்வு..

mettur dam
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மாட்டோம் என கடந்த சில நாட்களாகவே கர்நாடக அரசு கூறிவந்த நிலையில் கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள கபினி உள்ளிட்ட அணைகளில் நீர் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதையடுத்து கபினி அணையிலிருந்து தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 11ஆயிரத்து 998 அடி அதிகரித்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி காவிரியில் திறக்கப்பட்ட 27 ஆயிரம் கன அடி உபரிநீர் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. தற்போது நிர்வரத்து 19 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது..

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4923 கன அடியிலிருந்து 11 ஆயிரத்து 998 கனஅடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 74.01 அடியாக உயர்ந்துள்ளது நீர் இருப்பு 35.244 டிஎம்சியாக இருக்கிறது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1500 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
உதயநிதியின் கேள்விக்கு விஜய் பதில் சொல்லமாட்டார்!. தீர்மானம் கொண்டுவரும் தவெக?..