கரூர் கம்பெனி ஓனர் ஓடிவிட்டார்!.. நான் ஸ்டாலினை சொல்லல!.. முதல்வர் விஜய் நக்கல்!...
அதிமுகவிலிருந்து திமுகவுக்கு போனவர் செந்தில் பாலாஜி. கரூர் மாவட்டத்தில் அதிக செல்வாக்கு பெற்றவர் இவர். செந்தில் பாலாஜி நம் பக்கம் இருந்தால் கரூரில் வெற்றி நமக்கே என அரசியல் கட்சிகள் நினைக்கும் அளவுக்கு களப்பணிகளை செய்வார். தவெக தலைவர் விஜய் கரூருக்கு சென்று பேசிக்கொண்டிருந்த போது பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாடிய பிறகுதான் அங்கே அசம்பாவிதம் ஏற்பட்டதாக தவெகவின் அப்போதே சொன்னார்கள். ஆனால் அந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என செந்தில் பாலாஜி மறுத்தார்..
ஒருபக்கம், தமிழகத்தில் தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில் ஆட்சியை கவிழ்ப்பதற்காக தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம் பேசிய சிலரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் செந்தில் பாலாஜியும் அவருடைய சகோதரர் அசோக் குமாரும் சொல்லிய நாங்கள் இதை செய்தோம் என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.
எனவே இது தொடர்பாக போலீசார் செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர். ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டனர். அதோடு கைதிலிருந்து தப்பிப்பதற்காக முன்ஜாமினும் பெற்றிருக்கிறார்கள். இந்நிலையில்,
இன்று கரூரில் பேசிய முதல்வர் விஜய் கரூர் கம்பெனி ஓனர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.. அவர் எங்கேயோ ஓடிவிட்டார்.. இன்னொருவர் சிங்கப்பூருக்கு ஓடி விட்டார்.. நான் ஸ்டாலின் சாரை சொல்லவில்லை. அவர் மீது எப்போதும் எனக்கு பாசம் உண்டு.. சிகிச்சைக்கு என சொல்லி ஒருவர் ஓடினாரோ (எ.வ.வேலு) அவரை சொன்னேன் என்று விஜய் நக்கலடித்தார்.