2 மணி நேரம் டாய்லெட்டில் இருந்து புரட்சி செய்தவர் உதயநிதி: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
தமிழக சட்டமன்றத்தில் தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், பனையூரில் நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சுக்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது நடவடிக்கையை சுட்டிக்காட்டி மிக கடுமையாக விமர்சித்தார். பெண்களை தவறாக பேசிய உதயநிதிக்கு காலம் தகுந்த பாடம் புகட்டியுள்ளதாக குறிப்பிட்ட அவர், காவல்துறை அதிகாலையிலேயே விசாரணைக்கு சென்றபோது, உடைகளை மாற்றுவதாகவும் கழிவறை செல்வதாகவும் கூறி சென்ற உதயநிதி இரண்டு மணி நேரம் கழிவறையிலேயே கழித்ததாக கிண்டலடித்தார்.
அவர் தன் வாழ்நாளில் இந்த அனுபவத்தை மறக்கவே முடியாது, அவரின் ஆணவத்தைக் காலம் கழிவறையில் உட்கார வைத்து அடக்கியிருக்கிறது" என்று சாடினார்.
மேலும், தவறு செய்தவர்கள் அதை உணர்ந்து மன்னிப்பு கேட்பதே தலைவனுக்கு அழகு என்று ஜெயலலிதா அம்மையாரின் உதாரணத்தைக் குறிப்பிட்ட அவர், வெளியிலும் வந்து சிரித்துக் கொண்டே 'தவறு செய்யவில்லை' எனப் பேசுவது ஆணவத்தின் உச்சகட்டக் கொடுமை என்றார். பெண்களின் பாதுகாப்புக்காகவும் கண்ணியத்திற்காகவும் முதல்வர் விஜய் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கையே ஒரு தலைவனுக்குரிய அடையாளம் எனப் பெருமிதத்துடன் பேசினார்.
Edited by Siva
