1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. three year old girl gang rape in near chennai

3 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்!.. புதரில் வீசப்பட்ட சிறுமி மரணம்!...

girl
தமிழகத்தில் கடந்த பல நாட்களாகவே தொடர்ந்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழக காவல்துறை உடனடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 
 
ஒரு பக்கம் பெண் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிங்கப்பெண் படையும் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. இந்த சிங்கப்பெண் படை பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகமாக நடமாடும் பள்ளிகள், கோவில், கல்லூரி. பேருந்து நிலையங்கள், தியேட்டர்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் ரோந்து செல்வார்கள். பெண்கள் என்னவிதமான பிரச்சனைகளை சந்தித்தாலும் தங்களிடம் உடனே தெரிவிக்குமாறு  சிங்கப்பெண் படை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது..ஆனாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. 
 
இந்நிலையில், திருவள்ளூர் அருகே 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து சிலர் புதரில் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பீகாரை சேர்ந்த 19 வயது நபரை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
 
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக துணை பொது செயலாளர் கனிமொழி ‘இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. பொறுப்பு எனும் சொல்லுக்கு பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில் பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதை தவிர வேறென்ன செய்ய முடியும்?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார்.
 
அடுத்த கட்டுரையில்
சங்கீதா தொடர்ந்த விவகாரத்து வழக்கு!.. விஜய் நேரில் ஆஜராவாரா?...