ஜனநாயகன் மூளைக்கு நல்லது!.. வாயை விட்டு ட்ரோலில் சிக்கிய சபாநாயகர்!..
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தமிழகத்தின் முதலமைச்சராக மாறிவிட்ட நிலையில் அவரின் ஜனநாயகன் திரைப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸாகியிருக்கிறது. விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
படம் முடிந்ததும் விஜய் கடந்த 30 வருடங்களில் நடித்த பல படங்களிலிருந்தும் முக்கிய காட்சிகளை தொகுத்து வெளியிட்டுள்ளனர். இது தீவிர விஜய் ரசிகர்களுக்கு கண்ணீரை வரவழைத்திருக்கிறது. இனிமேல் நாம் விஜயை நடிகராக திரையில் இப்படி பார்க்க முடியாது என்கிற சோகம் அவர்களின் முகங்களில் தெரிந்தது..
ரசிகர்கள் மட்டுமல்ல.. சில தவெக அமைச்சர்களும் நேற்று தியேட்டரில் ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டு கண் கலங்கினார்கள். ஒருபக்கம் நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் முன்னெடுத்துள்ள போராட்டத்தை ஜனநாயகன் திரைப்படம் மழுங்கடித்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.. இயக்குனர் அமீர் இந்த கருத்தை கூறியிருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் ஜனநாயகன் படத்தை பார்ப்பதால் மூளைக்கு சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஏற்படும்.. யாருடைய மூளையையும் சலவை செய்யும் படம் அல்ல என்று கூறியிருக்கிறார்.இதை பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள்.