விஜய்னா வசூல்தான்!.. ஜன நாயகன் முதல் நாள் கலெக்ஷன் அப்டேட்!..
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகிவிட்டநிலையில் அவர் கடைசியாக நடித்த திரைப்படமான ஜன நாயகன் நேற்று உலகமெங்கும் வெளியானது. இந்த படத்திற்காக விஜயின் ரசிகர்கள் கடந்த ஆறு மாதமாக காத்திருந்தார்கள். தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் அப்போது வெளியாகவில்லை. தற்போது ஏ சான்றிதழ் இந்த படம் வெளியாகியிருக்கிறது..
தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து சூப்பர் ஹிட் அடுத்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகியிருந்தாலும் விஜய்க்கு ஏற்ற மாதிரியும், தமிழுக்கு ஏற்ற மாதிரியும் இந்த படத்தின் இயக்குனர் எச்.வினோத் சில மாற்றங்களை செய்திருக்கிறார். நேற்று வெளியான ஜனநாயகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விஜய் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு திருவிழாவாகவே அமைந்துவிட்டது..
இந்நிலையில்தான், ஜனநாயகன் திரைப்படம் நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 78.27 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. அதில் வெளிநாட்டில் மட்டும் ரூ,30 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது..