சுகாதாரத்துறை அமைச்சர் யாருன்னே தெரியாது.. என்னை பொருத்தவரை மா.சு தான் அமைச்சர்.. சத்யராஜ் பேச்சு.. நெட்டிசன்கள் கிண்டல்...
சமீபத்தில் ஒரு பொது நிகழ்ச்சியில் மூத்த நடிகர் சத்யராஜ் பேசிய பேச்சு, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தையும் நகைச்சுவையான மீம்ஸ்களையும் உருவாக்கியுள்ளது.
தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து பேசிய அவர், "இப்போது இருக்கும் சுகாதாரத்துறை அமைச்சர் யார் என்று எனக்கு தெரியாது, ஆனால் மா.சுப்ரமணியன் தான் எப்பவும் அமைச்சர் என்று தெரிவித்தார்.
இதற்கு நெட்டிசன்கள் ஸ்டாலின் தான் சி.எம்., உதய்தான் டெபுடி சி.எம், திமுக ஆட்சிதான் இப்போதும் நடக்குறது.. இப்போ இருக்கிற பிரதமரை எனக்கு தெரியாது, மன்மோகன் சிங் தான் பிரதமர். இப்ப இருக்கிற 500 ரூபாய் நோட்டு எனக்கு தெரியாது, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுத்தான் நம்புவேன்" என்று கலாய்த்து பதிவு செய்து வருகின்றனர்..
மேலும் மீம்ஸ் கிரியேட்டர்கள், "அது ஒன்னுமில்ல சார், கடந்த மே மாத தேர்தல் முடிவுகளிலிருந்து அவர் 'செலக்டிவ் அம்னீஷியா' என்ற நோயால் சத்யராஜ் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கார் போல!" என்று கிண்டலடித்து வருகின்றனர். அரசியல் எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் சத்யராஜ் இவ்வாறு பழைய நினைவுகளிலேயே மூழ்கியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருவது தற்போது இணையத்தில் பெரும் ட்ரெண்டாகி வருகிறது.
Edited by Siva
