1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. thirumavalavan advice to tvk vijay

ஆள் புடிக்கிற வேலை வேணாம்!.. அது வேஸ்ட்!.. விஜய்க்கு திருமா அட்வைஸ்!...

thiruma
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ளது. குறிப்பாக 60 வருடங்களுக்கு பின் பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து கூட்டணி ஆட்சியை தவெக தலைவர் விஜய் அமைத்திருக்கிறார். இது ஒரு புதிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து கூட்டணி கட்சிகளுடன் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்தாலும் தனிப் பெரும்பான்மை பெறும் முயற்சியில் தவெக இறங்கியிருக்கிறது.

ஏற்கனவே அதிமுகவிலிருந்து 6 எம்.எல்.ஏக்கள் தங்களின் பதவி ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்து விட்டனர். குதிரை பேரம் நடத்துவதாக அதிமுகவும் திமுகவும் தொடர்ந்து கூறி வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டிருக்கிறது.

இந்நிலையில்,  ஒரு விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் ‘சினிமாவில் ஹீரோ தோன்றுவது போல திடீரென தோன்றி சாதிய வன்கொடுமை, பெண் அடிமைத்தனத்தை ஒழித்து விட முடியாது. அதற்கு நீண்ட நெடிய  அரசியல்படுத்துதல் தேவை.. அரசியல்படுத்துதல் என்பது ஆள் பிடிப்பது அல்ல.. பிற கட்சிகளில் இருந்து ஆள் பிடித்து வந்து தன் கட்சியில் சேர்ப்பது அல்ல.. கொள்கை  தெரியாதவர்களை அது 10 ஆயிரம் பேராக இருந்தாலும், 10 லட்சம் பேராக இருந்தாலும் சரி.. அவர்களை சேர்ப்பது வீண்’ எனக் கூறியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More