நான் செய்த பெரும் தவறு அதிமுக, திமுகவுடன் சேர்ந்ததுதான்- வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது எக்ஸ் பக்கத்தில் தொண்டர்களுக்காக சில விசயங்களை பகிர்ந்துள்ளார். அதில்,
என் வாழ்க்கையில் 2 பெருந்தவறுகள் செய்துவிட்டேன். ஒன்று 2006ல் அண்ணா திமுகவுடன் உடன்பாடு வைத்தது. 2017ல் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுகவுடன் உடன்பாடு செய்துகொண்டது இரண்டாவது பெரும் தவறாகும். இவர்கள் இருவரிடமும் நாம் கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் நம் கட்சி இன்னும் வலிமை பெற்ர்றிருக்கும்.
பொதிகைமலை உறுதியாக இருப்பதுபோல நானும், நமது இயக்கமும் சரியான முடிவுகளை இன்றைய அரசியலில் நாம் மேற்கொண்டிருக்கிறோம். இனி நமக்கு எவ்வித கேடும் யாரும் செய்ய முடியாது.
வைரம் பாய்ந்த வஜ்ரம் போன்ற கண்மணிகளே நீங்கள் லட்சோப லட்சம் பேர் இருக்கிறீர்கள். நடைமுறையில் சரிவிலிருந்து மீண்டு ஓங்கி உயர்ந்து தலை நிமிர்ந்து தமிழக அரசியலில் நம் இயக்கம் பயணிக்கிறது. இனி நமக்கு தோல்விகள் இல்லை என்று வைகோ தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
