1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 14 பிப்ரவரி 2026 (13:47 IST)

நயினார் நாகேந்திரன் கமெண்ட்!.. திரிஷா அமைதியாக இருப்பது ஏன்?.. நெட்டிசன்கள் கேள்வி..

trisha
trisha

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் மேடைகளில் பேசும்போது தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என சொல்லி வருகிறார். நேற்று சேலத்தில் பேசியபோது ‘
நாங்கள் ஆட்சியில் இருப்பவர்களைப் பற்றி மட்டுமே பேசுவோம்.. மக்களால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட கட்சிகளை நாங்கள் ஏன் பேச வேண்டும்?’ என்று கூறினார். அவர் அதிமுக பாஜக என்கிற பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் மறைமுகமாக அவர் குறிப்பிடுவது அந்த கட்சிகளை தான்..

இது அதிமுக, பாஜகவினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்கள் இருவரும்தான் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று செய்தியாளரிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.. திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்.. குடும்பஸ்தனாக இருந்து அரசியல் செய்ய வேண்டும்.. அப்படி வெளிவந்து பேசினால்தான் இதற்கு முன் வந்த அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள் என்பது அவருக்கு தெரியும்’ என்று பேசியிருந்தார்..

விஜயை திரிஷாவுடன் இணைத்து அவர் பேசியதை பலரும் கண்டித்து வருகிறார்கள்.. தனிப்பட்ட ஒருவரை, அரசியல் இல்லாத ஒருவரை பற்றி இப்படி பேசக்கூடாது’ என்று டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் சொல்லி வருகிறார்கள்..

விஜயின் லியோ படம் வெளியான போது செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான் திரிஷாவை பற்றி ஏதோ சொல்லிவிட்டார் என்பதற்காக நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் மன்சூர் அலிகானை திட்டி பதிவிட்டார். மேலும், மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க வேண்டும்.. இல்லையென்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்’ என்றெல்லாம் மிரட்டினார்..

ஆனால் தற்போது நயினார் நகந்திரன் தன்னை பற்றி மிகவும் வெளிப்படையாக செய்தியாளரிடம் பேசியதற்கு திரிஷா எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.. இதையடுத்து ‘மன்சூர் அலிகான் மீது கோபப்பட்ட நீங்கள் இப்போது ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?’ அரசியல்வாதி என்றால் பயமா?’ என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்..