1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm vijay talk in conducted the ias and ips meeting

கட்சிக்காரன்னு பார்க்கக் கூடாது!.. அதிகாரிகளிடம் கறாரா சொன்ன முதல்வர் விஜய்!...

vijay
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று அக்கட்சியின் ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் தமிழக முதல்வர் விஜய் இன்றும் நாளையும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டார்.

அதன்படி, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு துறைகளை சேர்ந்த உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

இன்று காலை 11 மனிக்கு துவங்கிய இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை, வளர்ச்சி திட்டங்கள், ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்களுக்கான சேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதில், பல அதிகாரிகளும் தங்களின் ஆலோசனைகளை கூறினார்கள். இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் விஜய் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கவனம் செலுத்த வேண்டும் எனவும், கட்சிக்காரர்கள் என முக்கியத்துவம் கொடுக்காமல் பொதுமக்களுக்கான அரசாக இது இருக்க வேண்டும் எனவும், தவெக உட்பட அரசியல் தலையீடு எதுவும் இல்லாமல் காவல்துறை செயல்பட காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படும் என பேசியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன் என்றவர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய எம்.ஆர்.விஜயபாஸ்கரை சேர்க்கலாமா? உதயநிதி