பாஜகவுக்கு வேறு வேலையில்லயா?.. திரிஷா பற்றி பேசவேண்டுமா?.. காங்கிரஸ் கேள்வி!...
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கியதில் இருந்தே திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபகாலமாக அதிமுக, பாஜகவையும் அவர் பேச துவங்கியிருக்கிறார்.. அதிமுகவை ஊழல் அடிமை கட்சி என்று பேசினார்.. மேலும் அதிமுக பாஜகவுக்கு அடிமையாக இருப்பதாக தொடர்ந்து சொல்லி வருகிறார்.. ஒருபக்கம் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என்று தொடர்ந்து சொல்கிறார்.. இது அதிமுக மற்றும் பாஜகவினருக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது..
நேற்று சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கூட விஜய் இதே கருத்துக்களை பிரதிபலித்தார். அதை தொடர்ந்து விஜய் பேசியது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொன்ன தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய் எனக்கு ஒரு ஆளே அல்ல.. விஜய் முதலில் திரிஷாவை விட்டு வெளியே வர வேண்டும்.. வீட்டை விட்டு வெளியே வரவேண்டும்.. குடும்பஸ்தனாக இருந்து அரசியல் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
நயினார் நாகேந்திரன் திரிஷாபை பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நாஞ்சில் சம்பத், நிர்மல் குமார், செங்கோட்டையன், டிடிவி தினகரன், கனிமொழி சோமு உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளரிடம் கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆளும் பாஜகவுக்கு நிறைய வேலைகள் இருக்கும் போது திரிஷாவை பற்றி ஏன் பேச வேண்டும்?.. தனிப்பட்ட முறையில் ஒருவரை தாக்கி பேசுவது சரியல்ல என்று கூறியிருக்கிறார்..