இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை ஸ்டார்ட்!.. புதுசா புதுசா வராங்களே!...
40 வயதை தாண்டி விட்டாலும் திரிஷா தற்போதும் ஒரு முக்கிய நடிகையாக வலம் வருகிறார். ஒருபக்கம் முன்னாள் நடிகர் மற்றும் இந்நாள் தமிழக முதல்வர் விஜய்யோடு இணைத்தும் திரிஷா பேசப்படுகிறார். ஆனால் இதுபற்றி இரண்டு பேருமே விளக்கம் அளிப்பதில்லை. ஆனால் இவர்கள் இருவரையும் இணைத்து சர்ச்சையான செய்திகள் தொடர்ந்து வெளியாகும். சில நாட்களுக்கு முன்பு கூடஒரு திருமண விழாவிற்கு முதல்வர் விஜயுடன் திரிஷாவுடன் சென்றது சர்ச்சையானது..
எனவே திரிஷா எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. இந்நிலையில்தான் நடிகை திரிஷாவின் பெயரில் இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என ஒரு புதிய நற்பணி இயக்கம் திருநெல்வேலியில் தொடங்கப்பட்டிருக்கிறது.
தச்சநல்லூரை சேர்ந்த ராஜகோபால் என்கிற தொழிலதிபர் இந்த பேரவையை தொடங்கியிருக்கிறார். பதவிக்காக அல்ல.. தமிழக மக்களின் உரிமைக்காக என்கிற வாசகத்துடன் திரிஷா புகைப்படத்துடன் கூடிய லோகோவும் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
மக்களுக்கு மருத்துவ சேவை, சமூக சேவை, சட்ட உதவி, அரசு சான்றிதழ்கள் பெற உதவி போன்ற பணிகளை தாங்கள் மேற்கொள்ளப் போவதாகவும் விரைவில் மாவட்டம் முழுவதும் இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தொடங்கவிருப்பதாகவும் ராஜகோபால் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். மேலும், இப்படி ஒரு பேரவை துவங்குவது பற்றி திரிஷாவிடம் நாங்கள் கூறவில்லை.. அவரிடம் அனுமதி பெறவில்லை.. நாங்களாகவே தொடங்கியிருக்கிறோம்.. அவர் முதலமைச்சர் விஜயுடன் இணைந்து அரசியலுக்கு வரவேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று ராஜகோபால் கூறியிருக்கிறார்.