பெரிய சரிவுக்கு பின் தங்கம் விலை சற்று உயர்வு.. ஆனால் வெள்ளியின் விலை?
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,600-க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.165 உயர்ந்து ரூ.9,495-க்கும், சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்து ரூ.75,960-க்கும் விற்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகச் சரிந்து வந்த தங்கத்தின் விலை, வாரத் தொடக்கத்திலேயே கணிசமாக ஏற்றம் கண்டிருப்பது நகை வாங்குவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேசமயம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,75,000-க்கும் நிலையான விலையிலேயே நீடிக்கிறது.
தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வு சர்வதேசச் சந்தை நிலவரம் மற்றும் உள்ளூர் தேவை அடிப்படையில் அமைந்துள்ளது.

