1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. actress trisha did road show without permission

கோவையில் அனுமதி இல்லாமல் ரோட் ஷோ நடத்திய திரிஷா - நடந்தது என்ன?..

trisha
நடிகை திரிஷா சமீபத்தில் கோவையில் ஒரு புதிய மொபைல் கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். அப்போது அவரை பார்க்கும் ஆர்வத்தில் நிறைய ரசிகர்கள் அங்கு குவிந்து விட்டனர்.

காந்திபுரம் 100 அடி சாலையில் திரிஷா சிறிது நேரம் ரோட் ஷோவும் செய்தார். திரிஷாவின் அருகில் செல்ல முயன்ற ரசிகர்களை காவல்துறை அதிகாரிகளும், பவுன்சர்களும் மிகவும் சிரமப்பட்டு தடுத்தனர். இது தொடர்பான புகைப்படங்களை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிருந்திருந்தார்.

இந்நிலையில்தான், கோவையில் நடிகை திரிஷா நடத்திய ரோட் ஷோவுக்கு போலீஸ் அனுமதி எதுவும் தரவில்லை என்பது தெரியவந்துள்ளது. எங்கிருந்தோ போன் கால் வந்ததால் அவருக்கு காவல்துறை பாதுகாப்பதற்காக சொல்லப்படுகிறது. தனது அரசியல் பயணத்தின் தொடக்கமாகவே திரிஷா அந்த ரோட் ஷோவை நடத்தியிருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
தெர்மாகோலை நானா போட்டேன்!.. எப்படி ஓட்டுனீங்க!. இப்ப தவெகவை பாருங்க!...