வியாழன், 15 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (11:52 IST)

நஸ்ரியா தற்கொலை முயற்சி: அதிர்ச்சி வீடியோ வெளியானதால் பரபரப்பு

நஸ்ரியா தற்கொலை முயற்சி: அதிர்ச்சி வீடியோ வெளியானதால் பரபரப்பு
இராமநாதபுரத்தில் ஆயுதப்படை பிரிவின் பெண் காவலராக பணிபுரிந்து வந்த திருநங்கை நஸ்ரியா தற்கொலை முயற்சி செய்த வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயுதப்படை பிரிவு காவலர் நஸ்ரியா கடந்த 3 வாரங்களாக பணிக்கு வரவில்லை என்றும், இதுகுறித்து அவர் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை என்பதாலும் அவரை அழைத்து விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விசாரணையின்போது அவரை மூன்று காவலர்கள் தகாத வார்த்தையில் பேசியதாகவும் இதன் காரணமாக தற்கொலை முயற்சியில் நஸ்ரியா ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

நஸ்ரியா தற்கொலை முயற்சி: அதிர்ச்சி வீடியோ வெளியானதால் பரபரப்பு
நஸ்ரியா தண்ணீரில் எலி மருந்தை கலந்து குடிக்கும் வீடியோவை அவரே எடுத்து இணையதளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த காவலர்கள் உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தற்போது நஸ்ரியா அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன