1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Abirami try to suicide in puzhal

சிறைக்குள் அபிராமி தற்கொலை முயற்சி?

Abirami
தனது இரண்டு குழந்தைகளையும் கொன்ற வழக்கில் சென்னை புழல் சிறையில் உள்ள அபிராமி தற்கொலை முயற்சி செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குன்றத்தூரைச் சேர்ந்த அபிராமி தனது காதலன் சுந்தரத்தோடு வாழ்வதற்கு கணவனும் குழந்தைகளும் இடையூறாக இருந்ததால்,தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு கணவரையும் கொலை செய்ய முயற்சி செய்து தனது கள்ளக்காதலன் சுந்தரத்தோடு நாகர்கோயில் தப்பி செல்ல முயன்றார். நாகர்கோயிலில் வைத்து அவர்களிருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அபிராமி மற்றும் சுந்தரம் இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவருக்கும் அக்டோபர் 12-ந்தேதி வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறைக்கு வந்ததில் இருந்தே மிகவும் மன உளைச்சலில் இருந்து வந்த அபிராமி நேற்றிரவு சிறையில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

சிறை அதிகாரிகள் மற்றும் சக கைதிகளால் காப்பாற்றப்பட்ட அவர் தற்போது சிறை மருத்துவமனையில் அனுமத்திக்கப் பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அடுத்த கட்டுரையில்
வோடபோன் பிரீபெயிட் சலுகை: விவரம் உள்ளே