பாட மறுத்த அனிருத் - தற்கொலை முயற்சி செய்த இயக்குனர்!

Last Modified வியாழன், 22 நவம்பர் 2018 (13:23 IST)
அனிருத்தை தங்களது படத்தில் பாட வைக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.  இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் இயக்குனர் பொன்முடி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் தமிழ்த் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பையா, பீச்சாங்கை போன்ற படங்களில் வில்லனாக நடித்தவர் பொன்முடி. இவர் இப்போது சோமபான ரூப சந்தரன் என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.
 
இப்படத்தில் மெர்லின் படத்தில் நடித்த விஷ்ணுப்பிரியன் நாயகனாகவும், பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
 
ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் சென்றுவிட்டதால் தற்போது அவரின் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகிறது.
 
மேலும் படத்தில் ஒரு பாடலை அனிருத்தை பாட வைக்கலாம் என இசையமைப்பாளர் அப்பாஸ் ரஃபி உறுதியளித்துள்ளதால் அந்த நம்பிக்கையில் பட வேலைகளை பார்த்துள்ளார்.
 
ஆனால் இப்போது படு பிஸியாக இருப்பதால் அனிருத் பாட மறுத்துள்ளார், அடுத்த படத்தில் பாடுகிறேன் என்றும் கூறியிருக்கிறார்.
 
இதுதொடர்பாக தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே பிரச்சினை உண்டானது. 90 சதவீதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ஒரு பாடலுக்காக படம் நின்று போனதால் இயக்குனர் பொன்முடி மனஉளைச்சலுக்கு ஆளானார். 

 
இதனால் இயக்குனர் பொன்முடி அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவரை உதவி இயக்குனர்கள் காப்பாற்ற இப்போது ஓய்வில் இருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :