தற்கொலை முயற்சி செய்த நடிகை நிலானி மீது வழக்குப்பதிவு
கடந்த சில நாட்களாக சின்னத்திரை நடிகை நிலானி குறித்த செய்திகள் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்று வருவது தெரிந்ததே. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் நிலானி திடீரென கொசுமருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
இந்த நிலையில் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்ததாக சின்னத்திரை நடிகை நிலானி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனார். இதுகுறித்து அவரிடம் விசாரணை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக நடிகை நிலானி திருமணம் செய்ய மறுத்ததால் கடந்த ஞாயிறு அன்று அவரது காதலனான உதவி இயக்குநர் காந்தி லலித்குமார் தீக்குளித்து மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.