1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin starts his election compaign in april

ஏப்ரல் 2ம் தேதி பிரச்சாரத்தை துவங்கும் முக ஸ்டாலின்!.. சூடுபிடிக்கும் அரசியல் களம்!..

mk stalin
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது. எனவே தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க துவங்கியிருக்கிறது. திமுகவை பொருத்தவரை எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை 23 கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. நடிகர் விஜய் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்களை பிரிக்கலாம் என்கிற கருத்து நிலவுவதால் வழக்கத்தைவிட அதிகமான கட்சிகளுடன் திமுக கூட்டணி அமைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒருபக்கம் தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கியிருக்கிறார்கள். ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தனது தனது தேர்தல் பிரச்சாரத்தை இரண்டு நாட்களுக்கு முன்பு துவங்கிவிட்டார் . அதேபோல், தவெக தலைவர் விஜய் வருகிற 28ம் தேதி தான் போட்டியிடவுள்ள பெரம்பூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அன்றே அவர் மொத்தம் 5 இடங்களில் சென்னையில் பேசுகிறார்..

இந்நிலையில்தான், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வருகிற ஏப்ரல் 2ம் தேதி தேர்தல் பிரச்சாரத்தை துவங்க திட்டமிட்டிருக்கிறார். ஏப்ரல் 2ம் தேதி அவர் திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார். அதன்பின் தமிழக முழுவதும் பல ஊர்களுக்கும் பிரச்சாரம் செய்து ஏப்ரல் 21ம் தேதி தனது பிரச்சாரத்தை அவர் முடித்துக் கொள்கிறார்..
அடுத்த கட்டுரையில்
இனிமே வண்டி நிக்காது!.. 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கும் விஜய்?!..