தொடர்புடைய செய்திகள்
- மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம்: முதலமைச்சர் விஜய்க்கு விசிக முழு ஆதரவு
- ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் அங்கீகாரம் கிடைத்துள்ளது: தமிழக வரலாற்றில் முதல்முறை: தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு
- மின்வெட்டு பிரச்சனை!. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு!..
- பயிர் கடன் 100 சதவீதம் தள்ளுபடி!. விஜயின் அறிவிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி!...
- தவெகவுக்கு தாவும் அதிமுகவினர்!.. அப்செட்டில் தவெகவினர்!.. நடப்பது என்ன?!...
இனிமே இப்படி செஞ்சா!.. எம்.எல்.ஏ ரியாக்ஷன் வைரலானதால் சபாநாயகர் வார்னிங்!...
தவெக அரசு பொறுப்பேற்றது முதலே அரசின் மீது அதிமுக, திமுக கட்சிகள் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்கள். குறிப்பாக சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது, சிறுமிகள் முதல் பெண்கள் வரை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள் என அவர்கள் கூறி வருகிறார்கள்..
அதோடு இதுபற்றி முதலமைச்சர் விஜய் எந்த கருத்தும் தெரிவிப்பதில்லை என்றும் அவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில்தான் கடந்த வெள்ளிக்கிழமை சட்டசபை கூடிய போது எதிர்கட்சி தலைவர் உதயநிதி உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் வாயைத் தொறந்த சி.எம் சார், மாஸ்டர் வாயில் பிளாஸ்டர் என எழுதப்பட்ட பதாகைகளை கையில் பிடித்தபடி சட்டசபைக்கு வந்தனர். மேலும், பேசமாட்டேன் என்பதில் சரித்திரம் படைத்து வருகிறார் முதல்வர் என்றெல்லாம் நக்கலடித்தனர். அதற்கு முதல்வர் பேச வேண்டிய நேரத்தில் பேசுவார் என்ன தவெக அமைச்சர்கள் பதிலடி கொடுத்தார்கள்.
அப்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்தபோது பின்னால் அமர்ந்திருந்த திமுக உறுப்பினர் துரை காட்டிய ரியாக்சன் புகைப்படமாக சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அவர யாரை நக்கலடித்தார் என்பது தெரியவில்லை. முதல்வர் விஜய் சட்டசபையில் எதுவும் பேசாமல் சீரியஸான முகத்துடன் அமைதியாக உட்கார்ந்திருப்பதைத்தான் அவர் நக்கலடித்தார் என பலரும் சொல்கிறார்கள்.
இந்நிலையில்தான் இது தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் பேசிய சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுவதால் அவையின் மாண்பை காக்கும் படி எம்.எல்.ஏக்கள் நடந்து கொள்ள வேண்டும். கடந்த வெள்ளிக்கிழமை உருவ கேலி செய்வது போல ஒரு சட்டமன்ற உறுப்பினர் செய்தது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இனிமேல் அது போல நடந்தால் நான் நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.