ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது 69000 வழக்குகள்... 53000 கோடிக்கும் மேல் இழப்பீடு...
பிரபல பன்னாட்டு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் மீது உலகம் முழுவதும் 69000க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் சில அழகு மற்றும் உடல் பராமரிப்புத் தயாரிப்புகள் பெண்களுக்குக் கருப்பை புற்றுநோயை ஏற்படுத்துவதாகக் கூறி பாதிக்கப்பட்டவர்களால் இந்த வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க நீதிமன்றத்தில் இந்த வழக்குகளை முடிவுக்கு கொண்டுவருவதற்காக 53000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்களது தயாரிப்புகள் எப்போதுமே முற்றிலும் பாதுகாப்பானவை என்றும், அவை எந்தவிதமான புற்றுநோயையும் ஏற்படுத்தாது என்றும் ஜான்சன் நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வந்தாலும், இவ்வளவு பெரிய அளவிலான வழக்குகளைச் சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது.
மக்களின் உடல்நலனை பாதிக்கக்கூடிய இதுபோன்ற நுகர்வோர் தயாரிப்புகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளும் சோதனைகளும் அவசியமாகிறது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. நுகர்வோரின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது தொடரப்படும் இத்தகைய தொடர் சட்ட போராட்டங்கள் தொழில்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
Edited by Siva
