1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin says dmk will supprot delimitation

காங்கிரஸ் கோரிக்கை நிராகரிப்பு.. மறுவரைவு மசோதாவை ஆதரிக்கிறோம்.. முக ஸ்டாலின் பேட்டி...

stalin rahul
பாஜக தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வந்துள்ளது. இந்த மசோதா நாளை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. தொடக்கம் முதலே இந்த மசோதாவை திமுக எதிர்த்தது. ஆனால், நேற்று இந்த மசோதாவை ஆதரிப்பதாக திமுக அறிவித்தது. திமுகவின் இந்த முடிவு காங்கிரஸ் உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

எனவே, ராகுல் காந்தி, சோனியா காந்தி, மம்தா பேனர்ஜி ,மல்லிகார்ஜுனா கார்கே, டி.கே சிவக்குமார், பேபி உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் நேரில் வந்து திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலினிடம் பேசினார்கள். ஆழ்வார்பேட்டையில் உள்ள முக ஸ்டாலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது, பாஜகவின் மறுவரைவு மசோதாவை திமுக ஆதரிக்கக்கூடாது என்று அவர்கள் முக ஸ்டாலினிடம் கூறினார்கள்.

இண்டியா கூட்டணி தலைவர்கள் புறப்பட்டு சென்றபின் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின் ‘இண்டியா கூட்டணி தலைவர்கள் திமுகவின் முடிவை பரீசிலிக்க சொன்னார்கள். ஆனால், இப்போதுள்ள சூழ்நிலையில் பாஜக கொண்டு வரும் மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை’ என தெரிவித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இண்டியா கூட்டணியினர் பேச்சுவார்த்தை ஓவர்!.. என்ன முடிவெடுக்கப்போகிறார் ஸ்டாலின்?..