கொச்சைப்படுத்தி வீடியோ!.. ஜெயலலிதா விட்டிருப்பாரா?!.. முதல்வர் ஸ்டாலின் கேள்வி!..
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. எனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் இன்று காலை திருச்சியில் பிரச்சாரம் செய்தார்.
திருச்சி-யைப் பொறுத்தவரை திருச்சி மேற்கு தொகுதியில் கே.என் நேருவும், திருச்சி கிழக்கில் இனிகோ இருதயராஜும், திருவெறும்பூரில் அன்பில் மகேஷும் போட்டியிடுகிறார்கள்..
இவர்கள் மட்டுமில்லாமல் திருச்சியின் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளருக்காகவும் முக ஸ்டாலின் இன்று காலை பிரச்சாரம் செய்தார். திருச்சி உழவர் சந்தை பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் இன்று காலையில் பேசிய முதல்வர் கடந்த தேர்தலை போலவே இந்த முறையும் திருச்சியில் 100 சதவீத வெற்றி நமக்கு வர வேண்டும்.. திருச்சிக்காக பல முக்கிய திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறோம்.. சிறுபான்மையின மக்களுக்காக எதையும் செய்யும் வேட்பாளர் தான் இனிகோ..
திருச்சியில் திமுக அரசு கட்டிக் கொடுத்துள்ள பேருந்து நிலையத்தை பார்த்து விமான நிலையம் போல இருக்கிறது என அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். திருச்சியில் மட்டும் 321 கோவிலுக்கு குடமுழுக்கு செய்து கொடுத்திருக்கிறோம். திருச்சியில் 20 ஆயிரம் கோடி மதிப்பிலன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. தலைநகர் சென்னைக்கு சவால் விடும் வகையில் திருச்சி நகரம் மாறியிருக்கிறது என பேசினார்..
அதன்பின் அதிமுகவை பற்றி பேசும் போது பாஜக கூட்டத்தில் பெரியாரையும் அண்ணாவையும் கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டார்கள்.. ஆனால் அங்கிருந்த 3 முன்னாள் அமைச்சர்கள் சொரணையே இல்லாமல் அமைதியாக இருந்தார்கள்.. மக்கள் திலகம் எம்ஜிஆர், ஜெயலலிதா இப்படி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருக்கிறார்..