தொடர்புடைய செய்திகள்
- அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு!.. கொளத்தூரில் வேட்பாளர் பெயரை மாற்றி சொன்ன விஜய்..
- அம்மாக்களின் ஆசியோடு தொடங்குகிறேன்!.. பெரம்ப்பூரில் பிரச்சாரத்தை துவங்கிய விஜய்!..
- விஜய் நடத்துறது கட்சியா இல்லை மறுவாழ்வு மையமா?!.. கலாய்க்கும் அரசியல் விமர்சகர்கள்..
- ஒரே குடும்பம்!. 3 பேர்.. 3 கட்சி.. 3 தொகுதியில் போட்டி!.,. தேர்தல் அக்கப்போரு!...
- ரஜினி செஞ்ச அதே தப்பு!. விஜய் கட்சியை கலைத்துவிடுவது நல்லது!.. அமீர் கோபம்!..
கஞ்சா கடத்தி சிறைக்கு போனவருக்கு சீட் கொடுத்த விஜய்!.. இதுதான் உங்க டக்கா?!..
நடிகராக இருந்து அரசியல் கட்சியை துவங்கியவர் விஜய். கட்சி ஆரம்பித்தது முதலே திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது.. காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் திராணி இல்லாதவராக இருக்கிறார்.. அவருக்கு மக்களைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை.. கொள்ளையடிப்பது மட்டும்தான் அவருக்கு நோக்கம். போதைப்பொருட்களை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என்றெல்லாம் விமர்சனம் செய்து வருகிறார்..
விஜய் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.. இன்று பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் செய்த விஜய் அங்கு பேசிய போது கூட இதே கருத்தை தெரிவித்தார்.. அதாவது திமுக எனும் தீயசக்தியை ஒழிக்க வேண்டும்.. திமுக எனும் தீயசக்தியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. பெண்கள் கழிப்பறை கூட செல்ல முடியவில்லை.. அந்த இடத்திலும் கொலை நடக்கிறது.போதை கலாச்சாரம் அதிகமாக இருக்கிறது என்றெல்லாம் பேசினார்..
ஆனால் இதே விஜய் கஞ்சா கடத்தல் வழக்கில் சிறைக்கு சென்று 10 நாட்களுக்கு முன்பு ஜாமினில் வெளிவந்த சந்திர காண்டியன் என்பவரை பேராவூரணி தொகுதி வேட்பாளராக அறிவித்திருக்கிறார் விஜய். இதற்கு முன்னால் சந்திர காண்டியன் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜகவில் சீட் கிடைக்கவில்லை என்பதால் தவெகவுக்கு மாறி சீட்டு வாங்கிவிட்டார் என சொல்லப்படுகிறது.

அடுத்த கட்டுரையில்