1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. what aadhav arjuna said about his mother is lie

என் தாய் வறுமையில் தற்கொலை செய்துகொண்டார்!.. ஆதவ் அர்ஜுனா சொல்வது உண்மையா?..

adhav
தவெகவில் முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மருகமன் ஆவர். துவக்கத்தில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரங்களில் பணிபுரியும் நிறுவனத்தை நடத்தி வந்தார்.. திமுகவுக்கு கூட இவர் வேலை பார்த்திருக்கிறார்.. அதன்பின் விடுதலை சிறுத்தை கட்சியில் இணைந்தார். அப்போது அவர் திமுகவை விமர்சித்ததால் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் விஜயின் தவவில் இணைந்தார்.

நேற்று அயனாவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா ‘என்னை பற்றி நிறைய வதந்திகள் பரவுகிறது.. எதுவுமே உண்மை இல்லை.. படிக்க விரும்பிய எனது அம்மாவை திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்.. சென்ற இடத்தில் கடன், வறுமை, பொருளாதாரப் பிரச்சினை.. அவர் தற்கொலை செய்து கொண்டார்.. 5 வயதில் அம்மாவை இழந்தவன் நான்.. அதன்பின் 13 வயதில் என் ஆசிரியர் என் வாழ்க்கையை மாற்றினார்.. அதன்பின் அம்பேத்காரையும், பெரியாரையும் படித்தேன்.. அதனால்தான் எனக்கு அரசியலுக்கு வரும் ஆர்வம் ஏற்பட்டது’ என்று பேசியிருந்தார். மேலும் தமிழ்நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான திலகவதி என் பெரியம்மா’ எனவும் சொல்லியிருந்தார்..

இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி’ ‘ஆதவ் அர்ஜுனாவின் அம்மா கல்யாணி என் தங்கைதான்.. அவரை ஆந்திராவில் திருமணம் செய்து கொடுத்தார்கள்.. அது ஒரு கிராமம்.. அவரது மாமியார் மிகுந்த கலாச்சார பழக்கங்களை கொண்டவர்.. அதனால் வீட்டில் பல கட்டுப்பாடுகளை விதித்தார்.. அதை கல்யாணியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை..

அப்போது நான் வேலூர் பகுதியில் காவல் துறை அதிகாரியாக வேலை செய்ததால் அவ்வப்போது என் வீட்டுக்கு வந்து என்னுடன் சில நாட்கள் இருப்பார்.. அதன் பின் என்னை திருச்சிக்கு மாற்றி விட்டார்கள் அதனால் அவளுக்கு ஆறுதல் சொல்ல ஆள் இல்லாமல் போனது.. எனவே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். நான் மட்டும் வேலூரில் இருந்திருந்தால் அவள் தற்கொலை செய்துகொண்டிருக்க மாட்டாள்’ என சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து திலகவதி பேசிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ‘ஆதவ் அர்ஜுனா சொன்னது பொய்.. அவரின் தாய் வறுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை.. குடும்பப் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்’ என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்..
அடுத்த கட்டுரையில்
போர் முடிந்துவிட்டது, படைகள் வெளியேறும்: டிரம்ப்.. போர் முடியவில்லை, தாக்குதல் தொடரும்: நெதன்யாகு