1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk staliin giving eight thousand worth token

வாஷிங் மெஷின்.. ஃபிரிட்ஜ்.. மிக்சி.. எக்சேஞ்சுக்கு 8 ஆயிரம் கூப்பன்!.. திமுக தேர்தல் வாக்குறுதி!...

mk stalin
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவிருக்கிறது.. எனவே அதிமுக, திமுக, நாம் தமிழர், தவெக போன்ற கட்சிகள் ஒரு வழியாக தங்களின் வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பதை அறிவித்து முடித்து விட்டார்கள்.
அடுத்தது பிரசாரத்தை துவங்க வேண்டும்.. அதற்கு ஒவ்வொரு கட்சியும் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்க வேண்டும்.. அந்த வகையில் அதிமுக ஏற்கனவே பல தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்து விட்டது..

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது திமுக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகிறார்.. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 524 வாக்குறுதிகளுடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியாகியிருக்கிறது. தமிழ்நாட்டில் திமுக தேர்தல் அறிக்கைதான் ஹீரோ.. இந்தமுறை திமுகதான் சூப்பர் ஸ்டாராக களமிறங்கியிருக்கு’ என்று முதல்வர் நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்..

வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மிக்ஸி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை புதிதாக வாங்க, ஏற்கனவே இருக்கும் பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக் கொள்ள அரசு சார்பில் ரூ. 8000 இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருக்கிறார்
.
இந்த திட்டம் பெண்களிடம் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு 3500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு 4500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்..

இலவச மின்சாரம் பெற்று வரும் விவசாயிகளுக்கு மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்பு செட்டுகள் வழங்கப்படும்..

உயர்கல்வி மாணவர்கள் 35 லட்சம் பேருக்கு லேப்டாப் வழங்கப்படும்..

புதுமைப்பெண் திட்டத்தில் தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித்தொகை 1500 ஆக உயர்த்தி வழங்கப்படும்..

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும்’  என பல வாக்குறுதிகளை ஸ்டாலின் அறிவித்து வருகிறார்.

முழுமையான தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்..
அடுத்த கட்டுரையில்
அப்ப அதிமுக.. இப்ப தவெக!. கட்சி மாறி சீட் வாங்கிய வேட்பாளர்கள்!..