முக ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதி!.. உறுதியான திமுக - காங்கிரஸ் கூட்டணி!...
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எங்களுக்கு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என்கிற கோரிக்கையை தூக்கிப் பிடித்திருக்கிறது. அதை மாணிக்கம் தாகூர் எம்.பி, பிரவீன் சக்ரவர்த்தி போன்றவர்களும் பொது வெளியில் பேசினார். ஆனால், ஊடகம் ஒன்ரில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டில் ஒத்து வராது என்று கூறியிருந்தார்..
எனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது. இந்நிலையில்தான் 2 நாட்களுக்கு முன்பு மல்லிகார்ஜுனா கார்கேவும், ராகுலும் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் இது பற்றி விவாதித்தார்களாம். அப்போது நமக்கு திமுக கூட்டணிதான் ஒத்துவரும் என்ன கார்கே ராகுலிடம் சொன்னதாக தெரிகிறது.. அதோடு திமுகவுடன் செல்வதே நமக்கு நல்லது என சோனியா காந்தியும் வலியுறுத்தியதாக தெரிகிறது..
ஒருபக்கம் ஆட்சியில் பங்கு என்பது வேண்டாம். ஆனால், அதிகாரத்தில் பங்கு கொடுக்கிறோம் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.. அதாவது அமைச்சரைவில் பங்கு வேண்டாம்.. அரசு வழக்கறிஞர்கள், கூட்டுறவு பதவிகள் மற்றும் வாரிய தலைவர் போன்றவற்றில் உங்களுக்கு பதவிகள் கொடுக்கிறோம்.. அதைப்பற்றி பேசுவோம் என சொல்ல காங்கிரஸ் அதை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது.
ஒருபக்கம் திமுகவில் காங்கிரஸ் நீடிக்கிறது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர்தான் தேமுதிகவும் திமுகவுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார்கள் என சொல்கிறார்கள்..