1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk amounce two thousand for every summer in tamilnadu

இனி ஒவ்வொரு வருஷமும் 2 ஆயிரம் சிறப்பு தொகை!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...

mk stalin
கடந்து 2021 தேர்தல் பிரச்சாரத்தில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகையாக வீட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் 1000 ரூபாய் கொடுக்கப்படும் என திமுக அறிவித்தது. அதேநேரம், தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு  வந்த பின்னரும் இரண்டு வருடங்களாக மகளிர் உரிமைத் தொகை தமிழ்நாட்டில் கொடுக்கப்படவில்லை. அதன்பின் எடப்பாடி பழனிச்சாமி அழுத்தம் கொடுத்ததால் அந்த தொகையை திமுக அரசு கொடுக்க துவங்கியது..

சில நாட்களுக்கு முன்பு திடீரென மகளிர் உரிமை பெற்றுவரும் பெண்களின் வங்கி கணக்குகளில் 5 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு சார்பில் வரவு வைக்கப்பட்டது.. இது தொடர்பான வீடியோவை வெளியிட்ட முதல்வர் முக ஸ்டாலின் ‘தேர்தல் வருவதால் மகளிர் உரிமை தொகை கொடுப்பதை டெல்லியை சேர்ந்த சிலரும், அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் இருப்பவர்களும் முயற்சி செய்வதாக எனக்கு செய்திகள் கிடைத்தது.. எனவே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 3 ஆயிரம் மற்றும் கோடைகால சிறப்பு தொகையாக 2 ஆயிரம் என மொத்தம் 5 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு கொடுத்திருக்கிறது’ என கூறியிருந்தார்..

நேற்று சட்டப்பேரவையில் இதுபற்றி கேள்வி எழுப்பிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ‘நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு வருடங்கள் கோடை காலம் வரவில்லையா?.. தேர்தல் வரும் போது மட்டும் ஏன் கொடுக்கிறீர்கள்?’ என கேள்வி எழுப்பினார் . அதற்கு பதில் சொன்ன முதல்வர் முக ஸ்டாலின் ‘மக்களின் வங்கி கணக்கில் 15 லட்சம் போடுவதாக சொல்லி ஏமாற்றினீர்களே.. செய்தீர்களா?.. ஆனால் நாங்கள் இதை செய்திருக்கிறோம்’ என பதிலளித்தார்..

இந்நிலையில், அதே கேள்வியை இன்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி எழுப்பியிருந்தார்.. இதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன் ‘இனிமேல் ஒவ்வொரு வருடமும் மக்களுக்கு கோடைக்கால சிறப்பு தொகையாக 2 ஆயிரம் கொடுக்கப்படும்’ என அறிவித்தார்..
அடுத்த கட்டுரையில்
வடிவேலுவுக்கு விபூதி அடிச்ச திமுக!.. பண்ண பர்ஃபாமென்ஸ் எல்லாம் வீணாப்போச்சே!...