நாளை நாம் தமிழர் மாநாடு!.. ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள் அறிவிப்பு!..
கடந்த 16 வருடங்களாக தமிழக அரசியல் களத்தில் அரசியல் செய்து வருபவர் சீமான்.. நாம் தமிழர் கட்சி என்கிற அரசியல் கட்சியை துவங்கி திராவிட கட்சிகளுக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார் சீமான்..
நாம் தமிழர் கட்சி எல்லா தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு வருகிறது. 2016 தேர்தலில் 1.7% வாங்கிய வாக்குகளை பெற்ற நாம் தமிழர் கட்சி 2019ம் வருடம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் 3.9 சதவீத வாக்குகளை பெற்றது. அதன்பின் 2021 சட்டமன்ற தேர்தலில் 6.58 சதவீத வாக்குகளை பெற்றது.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8.2 சதவீத வாக்குகளை பெற்றது. இத்தனைக்கும் அது பிரதமரை தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்தல். அப்படி இருந்தும் 8.2 சதவீதம் பேர் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்திருந்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.. வருகிற சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவிருக்கிறது.
இந்நிலையில், திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பிரம்மாண்டமான மாநாடு நாளை நடைபெறவிருக்கிறது. அதில் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிவிக்கவுள்ளார் சீமான். 117 பெண் வேட்பாளர்களும், 117 ஆண் வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..