1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Minister Sekarbabu says temples will be opened soon

ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு பிறகு கோயில்கள் மீண்டும் திறப்பா?

From next week temples
வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு பிறகு கோயில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் திமுக ஆட்சியில் தொடங்கியதிலிருந்து இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்டு எடுப்பதில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளை மீட்டெடுப்பது வரை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது தெரிந்தது. 
 
இந்நிலையில் தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் அடுத்தவாரம் தொடங்கப்படவுள்ளது. அதில், முதல்கட்டமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் துவங்குகிறது என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 
 
மேலும், தமிழகத்தில் மூன்றாவது அலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரிய கோவில்களில் ஆடி மாத திருவிழாக்கள் தடைவிதிக்கப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 3ம் தேதிக்கு பிறகு கோயில்களை மீண்டும் திறப்பது தொடர்பாக முதலமைச்சர் முடிவெடுப்பார் என தெரியவந்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
பட்ஜெட்டிற்கும் கம்மியான விலையில் மைக்ரோமேக்ஸ் இன் 2பி!!