வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 12 ஜூன் 2021 (15:51 IST)

கோயில்களில் தமிழில் அர்ச்சனை

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில்,  அமைச்சர் சேகர்பாபு இன்று அறிவித்துள்ளதாவது:

 அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள உனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என கூறினார்.

மேலும், தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு அனைத்து கோவில்களிலும் வைக்கப்படும் எனவும், தமிழ்சில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர், செல்போன் எண் போன்ற விவரங்கள் அனைத்தும்  அறிவிப்புப் பலகையில் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளார்.

இதைத் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.