1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. chinny jeyanth son working next to cm vijay

விஜய்க்கு 5 ரூம் தள்ளி என் பையன் ரூம்!.. இதைவிட என்ன வேணும்!.. சின்னி ஜெயந்த் நெகிழ்ச்சி!..

chinny jeyanth
தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சின்னி ஜெயந்த். கதாசிரியர், காமெடி நடிகர், இயக்குனர் என கோலிவுட்டில் பல அவதாரங்களை இவர் எடுத்துள்ளார். 80, 90களில் பல திரைப்படங்களில் கல்லூரி மாணவனாக சின்னி ஜெயந்த் நடித்திருக்கிறார். அதேநேரம், இவர் தனது இரண்டு மகன்களையும் சினிமா துறையில் விடவில்லை.

அதிலும் தனது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணனை கலெக்டர் ஆக்கிவிட்டார். சென்னை
 திருப்பூர் மாவட்ட சப் கலெக்டராக பணியாற்றி வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் தற்போது சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சின்னி ஜெயந்த் ‘25 வருஷத்துக்கு முன்னாடி ஒரு படத்துல நடிச்சேன்.. அந்த படம் பேரு மாண்புமிகு மாணவன்.. அந்த மாண்புமிகு மாணவன் இப்போது மாண்புமிகு முதலமைச்சராக மாறியிருக்கிறார். நான் விஜய் சாரோட வேலை செஞ்சேன்.. இப்ப என்னுடைய மகன் அவரோட வேலை செய்கிறார்..

எனது மகன் Deputy Secretary to government & public department என்கிற போஸ்டிங்ல இருக்காரு.. முதலமைச்சர் அறையில் இருந்து 5வது ரூம்ல அவருடைய அறை இருக்கு.. நம்ம முதலமைச்சர் கூட அவர் இருக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷம்.. இதைவிட ஒரு அப்பாவுக்கு என்ன பெருமை வேணும்’ என நெகழ்ந்து பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
அடுத்த இன்னிங்ஸை ஆரம்பிக்கலாமா?!.. உதயநிதி ஸ்டாலின் டிவிட்!...