செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (09:49 IST)

எந்த இடம் உங்கள் பொதுவாழ்வில் புகழ் பூத்த இடமோ! வைரமுத்துவின் கருணாநிதி கவிதை

முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் திருவுருவப்படம் இன்று சட்டமன்றத்தில் குடியரசு தலைவரால் திறக்கப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது தயார் நிலையில் உள்ளன 
 
இன்று மதியம் சென்னை வரும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் மாலை நடைபெறும் சட்டப் பேரவை 100 ஆவது ஆண்டு விழா மற்றும் மு கருணாநிதியின் புகைப்படம் திறப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்
 
இதனையடுத்து பலர் மு கருணாநிதியின் புகழாரம் குறித்து கூறி வருகின்றனர். அந்த வகையில் கருணாநிதியின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும், பாடலாசிரியருமான கவியரசு வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருணாநிதி குறித்து கவிதை ஒன்றை குறிப்பிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
முத்தமிழறிஞரே!
 
எந்த இடம்
உங்கள் பொதுவாழ்வில்
புகழ் பூத்த இடமோ
 
எந்த இடம்
இனத்திற்கும் மொழிக்கும்
புகழ் சேர்த்த இடமோ
 
அந்த இடத்தில்
உங்கள்
புன்னகை பொழியும்
பொன்னோவியம்
 
உங்கள்
திருவுருவம் திறந்துவைக்கும்
குடியரசுத் தலைவருக்கும்
திறக்கச் செய்யும்
முதலமைச்சருக்கும்
நன்றி.