திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 மே 2021 (12:30 IST)

கருப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் - அமைச்சர் சேகர்பாபு!

கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வந்தாலும் கருப்பு பூஞ்சை நோய் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளன. இந்நிலையில் கொரோனாவிலிருந்து பலர் மீண்டு வந்தாலும் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பலருக்கு கரும்பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
 
இந்நிலையில் இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, கரும்பூஞ்ஜை தொற்றை கண்டு மக்கள் அச்சப்பட தேவை இல்லை. இது புதுவாக உருவான தொற்று பாதிப்பு அல்ல. கருப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.