அடிக்க கை ஓங்குறீங்களா?!.. சட்டசபையில் கொந்தளித்த ராஜ்மோகன்..
2026 சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் துவங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். இந்த தோல்வியை திமுக எதிர்பார்க்கவே இல்லை. 74 தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக எதிர்கட்சியாக அமர்ந்துள்ளது. அதோடு, திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தார். எனவே, அவரின் மகன் மு.க ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராகிவிட்டார்.
ஒருபக்கம், தவெக எம்.எல்.ஏக்கள் பெரும்பாலானவர்கள் முதன் முறையாக எம்.எல்.ஏக்களாக வெற்றி பெற்று சட்டசபைக்கு வந்திருப்பதால் அவர்களை சுலபமாக நோஸ்கட் செய்துவிடலாம் என திமுக நினைக்கிறது. திமுகவில் பல தேர்தலில் வெற்றி பெற்ற பலரும் சட்டசபையில் இருப்பதால் தவெக அமைச்சர்கள் திமுக ஊழல் தொடர்பான விஷயங்களை பேசினாலே திமுக சீனியர் எம்.எல்.ஏக்கள் எழுந்து மிரட்டும் படி கத்துகிறார்கள்..
இன்றும் அதேபோல் அவர்கள் நடந்துகொண்ட போது கோபமடைந்த அமைச்சர் ராஜ்மோகன் எங்களை கட்டுப்படுத்துவதற்கு எங்கள் முதல்வரின் ஒரு பார்வை போதும். திமுக எம்.எல்.ஏக்கள் அடிக்கப் பாய்வது போல வருகிறார்கள். திமுக எம்.எல்.ஏ உடுமை ஜெயக்குமார் அடிக்கப் பாய்வது போல் வருகிறார். கையை ஓங்குகிறார்.. திமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை தேவை.. தவெக அமைச்சர்களை திமுக எம்.எல்.ஏக்கள் ஒருமையில் பேசுகின்றனர் என கொந்தளித்திருக்கிறார்.