தொடர்புடைய செய்திகள்
- ஒரே மாதத்தில் மின்சார துறையை சீரமைக்கும் தவெக அரசு.. இதை ஏன் 50 ஆண்டுகளில் திராவிட அரசுகள் செய்யவில்லை?
- அம்மா உணவகத்தை சரிசெஞ்சாச்சு.. அடுத்தது மழைநீர் சேமிப்பு திட்டம் தான்.. தவெக அரசு அதிரடி நடவடிக்கை எடுக்குமா?
- கடந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.. தவெக அரசு அதிரடி உத்தரவு...
- சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு.. தவெக அரசு தீர்த்து வைக்குமா?
- கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!.. தவெக அரசு அதிரடி!.. திமுக அதிர்ச்சி!...
தவெக அரசுக்கு ஆதரவாக ஓட்டு 21 எம்.எல்.ஏக்கள்: சபாநாயகரின் அதிரடி முடிவு...!
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற தவெக அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் மீது தற்போதைக்கு எந்தவித ஒழுங்குமுறை நடவடிக்கையும் இல்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்ட இந்த எம்எல்ஏக்கள் மீது தகுதி நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சபாநாயகரின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 21 அதிமுக எம்எல்ஏக்களும் தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கடிதம் கொடுத்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து கடிதம் சமர்ப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அந்த கடிதத்தின் அடிப்படையிலும், கட்சியின் தற்போதைய முடிவை ஏற்றுக் கொண்டும், சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்கள் மீது தற்போதைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்ற இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்தார்.
அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல்களும், தவெக அரசின் மீதான எம்எல்ஏக்களின் மறைமுக ஆதரவும் இந்த முடிவின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த அதிரடி முடிவால் தவெக அரசு தனது பலத்தை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதோடு, அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேரும் தற்காலிகமாக தங்களின் பதவிகளை காப்பாற்றி கொண்டுள்ளனர்.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
